/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி கட்டடத்தை அகற்றிய இடத்தில் சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு
/
பள்ளி கட்டடத்தை அகற்றிய இடத்தில் சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு
பள்ளி கட்டடத்தை அகற்றிய இடத்தில் சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு
பள்ளி கட்டடத்தை அகற்றிய இடத்தில் சுகாதார நிலையம் அமைக்க ஏற்பாடு
ADDED : ஆக 08, 2024 01:24 AM

சித்தாமூர்:சித்தாமூர் ஒன்றியம், இந்தலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 30 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். அதே வளாகத்தில், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது.
பள்ளி வளாகத்தில், 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழுதடைந்த, இரண்டு பள்ளி கட்டடம் பயன்பாடு இல்லாமல் இருந்தது.
கட்டடத்தின் கூரை சேதமடைந்து, குழந்தைகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாழடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதன் விளைவாக, பழைய பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
துணை சுகாதார நிலையம், இ - சேவை மைய கட்டடத்தில் செயல்படுவதால், போதிய இடவசதி இன்றி, பொதுமக்கள் மற்றும் செவிலியர்கள் அவதிப்படுகின்றனர்.
ஆகையால் பழைய பள்ளி கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.