/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினம் - செங்கல்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
/
புதுப்பட்டினம் - செங்கல்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
புதுப்பட்டினம் - செங்கல்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
புதுப்பட்டினம் - செங்கல்பட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
ADDED : ஆக 12, 2024 11:45 PM
புதுப்பட்டினம், : புதுப்பட்டினம் - திருக்கழுக்குன்றம் இடையே வாயலுார், ஆயப்பாக்கம், நல்லாத்துார், நெரும்பூர், நடுவக்கரை ஆகிய ஊராட்சி பகுதிகள் உள்ளன.
இப்பகுதியினர், அத்தியாவசிய பொருட்கள், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்காக, புதுப்பட்டினம், திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
புதுப்பட்டினம் - செங்கல்பட்டு இடையே ஆயப்பாக்கம், நெரும்பூர் வழியாக, தடம் எண்: 212ஜி என்ற அரசுப் பேருந்து, இரண்டு தனியார் பேருந்துகள் உள்ளிட்டவை முன்பு இயக்கப்பட்டன.
தனியார் பேருந்துகள் வழித்தட அனுமதி பெற்றும், போதிய வருவாய் இன்றி, பல ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன. ஒரேயொரு அரசு பேருந்து மட்டும், குறிப்பிட்ட நேர வரையறையின்றி இயங்குகிறது.
காலை - மாலை நேரங்களில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் அதிகளவில் பேருந்தில் செல்வதால், மற்ற பயணியர் செல்ல இயலவில்லை.
பயணியர் மட்டுமின்றி, மாணவ - மாணவியரும், ஷேர் ஆட்டோவில் கூடுதல் கட்டணத்தில், காலதாமதமாக பயணம் செய்து அவதிப்படுகின்றனர்.
பெண்களுக்காக கட்டணமில்லா பேருந்தை, தமிழக அரசு இயக்கும் நிலையில், இப்பகுதியினருக்கு, அந்த பேருந்தும் இயக்கப்படவில்லை. '
எனவே, பயணியர் நலன் கருதி, காலை - மாலை நேரங்களில் கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், அந்த பேருந்துகளை கட்டணமில்லா பேருந்தாக இயக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.