/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீடு புகுந்த திருடனுக்கு தர்ம அடி
/
வீடு புகுந்த திருடனுக்கு தர்ம அடி
ADDED : மே 25, 2024 11:28 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலாவட்டம் பகுதியில், வீட்டின் பீரோவில் இருந்து, 19,300 ரூபாய் திருடி தப்ப முயன்ற நபரை, பகுதிவாசிகள் மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து, மதுராந்தகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
போலீசார், திருடனை கைது செய்து விசாரித்தனர்.
இதில், சிலாவட்டம் கிராமம், கே.கே.நகரைச் சேர்ந்தவர் திவாகர், 33. இவருடைய சகோதரி தீபா, 25, என்பவருக்கு குழந்தை பிறந்துள்ளதால், திவாகர் வீட்டில் தங்கிருந்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவை மூடிவிட்டு, அருகில் உள்ள கடைக்கு சென்று மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
மீண்டும் வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் உள்ளே இருந்து ஒரு நபர் வெளியே வருவதை கண்ட தீபா, கத்தி கூச்சலிட்டுள்ளார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அந்நபரை மடக்கி பிடித்து, தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
திருட்டில் ஈடுபட்டது, காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த பிரசாந்த், 29; பெயின்டர் என தெரிய வந்தது.
இவர், வேலையில்லாத நாட்களில், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு வந்துள்ளார்.
அவ்வாறு, நேற்று முன்தினம், சிலாவட்டம் பகுதியில் திவாகர் என்பவரின் வீட்டின் பீரோவில் இருந்து, 19,300 ரூபாய் திருடி தப்ப முயன்றது, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.