ADDED : மார் 05, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், சின்ன மேலமையூர் பகுதியில், மழைநீர் கால்வாய் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
இந்த கால்வாயின் சுவர்கள் இடிந்து விழுந்தன. இதனால், புதிய மழைநீர் கால்வாய் கட்ட வேண்டும் என, பகுதிவாசிகள், நகராட்சி நிர்வாகத்திடம், கோரிக்கை வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, புதிதாக மழைநீர் கால்வாய் கட்ட நகராட்சி பொது நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிக்கு, டெண்டர் விடப்பட்டு, பணி துவங்கப்பட்டு உள்ளது.