/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரேஷன் பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
/
ரேஷன் பணியாளர்கள் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : மார் 15, 2025 01:50 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின், செங்கல்பட்டு மாவட்ட செயற்குழு கூட்டம் , தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், ரேஷன் கடைகளில் கடந்த 10 நாட்களாக,'பில்' போடும் இயந்திரம் சரியாக வேலை செய்யாதது குறித்தும், பில் இயந்திரத்துடன் எடை இயந்திரத்தை இணைப்பதால் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் பணிச்சுமை, அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட, 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் அச்சிறுபாக்கம், லத்துார், சித்தாமூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரேஷன் கடை பணியாளர்கள், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.