/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ராயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
/
ராயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
ராயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
ராயமங்கலம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை சீரமைக்கப்படுமா?
ADDED : மே 28, 2024 11:30 PM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த ராயமங்கலம் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ளது. கிராம மக்கள் திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, மானாமதி, முள்ளிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல, இந்த பேருந்து நிறுத்தத்தையே பயன்படுத்துகின்றனர். தினசரி பள்ளி,கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்லும் மக்கள், இந்த பேருந்து நிறுத்தத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்த நிழற்குடையின் கூரை சேதமடைந்தும், போதிய இருக்கைகள் இல்லாததாலும், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த பழைய பேருந்து நிறுத்த நிழற்குடையை அகற்றி, புதிய நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.