/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி
/
மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி
மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி
மதுராந்தகம் சர்க்கரை ஆலையில் விவசாயிகளுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஆக 31, 2024 01:10 AM

மதுராந்தகம்:படாளம் அருகே மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு, கரும்பு பயிரிடும் பரப்பளவை அதிகரிக்கும் நோக்கில், கரும்பு விவசாயிகள் மற்றும் களப்பணியாளர்களுக்கு, நேற்று புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல் ஆட்சியர் தமிழ்ச்செல்வி தலைமையில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கரும்பு உற்பத்தி விவசாயிகளுக்கு, கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், கரும்பு ரகங்கள் மற்றும் இயல்புகள், பூச்சி நோய் கட்டுப்படுத்தும் முறைகள், கரும்பு பராமரிப்பு மற்றும் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
புத்தாக்க பயிற்சியில், கரும்பு ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் சசிகுமார், ஜெயச்சந்திரன், துரைசாமி மற்றும் ஆலையின் கரும்பு பெருக்கு அலுவலர் ஜெகதீசன், 100க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.