/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வட்டார டேபிள் டென்னிஸ்; செய்யூர் லயோலா பள்ளி அசத்தல்
/
வட்டார டேபிள் டென்னிஸ்; செய்யூர் லயோலா பள்ளி அசத்தல்
வட்டார டேபிள் டென்னிஸ்; செய்யூர் லயோலா பள்ளி அசத்தல்
வட்டார டேபிள் டென்னிஸ்; செய்யூர் லயோலா பள்ளி அசத்தல்
ADDED : ஆக 16, 2024 11:53 PM

செய்யூர் : மதுராந்தகம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, புக்கத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ - மாணவியருக்கு வட்டார அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.
இதில், அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என, மொத்தம் 10 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், மாணவியருக்கான யு - 14, 17 வயது பிரிவுகளின் இறுதிப்போட்டியில், செய்யூர் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர், பூதுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவியரை வீழ்த்தினர்.
யு - 19 வயது பிரிவு இறுதிப்போட்டியில், மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியரை வீழ்த்தி, செய்யூர் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவியர் வெற்றி பெற்றனர்.
மாணவர்களுக்கான யு - 14, 17 வயது பிரிவுகளின் இறுதிப்போட்டியில், செய்யூர் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், பூதுார் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வீழ்த்தினர்.
யு - 19 வயது பிரிவு இறுதிப்போட்டியில், செய்யூர் செயின்ட் எக்ஸ்பெரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களை வீழ்த்தி, செய்யூர் லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ - மாணவியர், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.