/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியில் ரூ.1.36 கோடியில் சீரமைப்பு பணி
/
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியில் ரூ.1.36 கோடியில் சீரமைப்பு பணி
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியில் ரூ.1.36 கோடியில் சீரமைப்பு பணி
நந்திவரம் சிறிய தாங்கல் ஏரியில் ரூ.1.36 கோடியில் சீரமைப்பு பணி
ADDED : செப் 04, 2024 02:15 AM

கூடுவாஞ்சேரி:நந்திவரம் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள சிறிய தாங்கல் ஏரிக்கு, கிருஷ்ணாபுரம், ராணி அண்ணா நகர், மலை மேடு உள்ளிட்ட பகுதியில் இருந்து, மழை நீர் வடிகால்வாய் வாயிலாக நீர் வருகிறது.
இந்த ஏரியில் உள்ள நீர், சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு காரணமாக இருந்து வருகிறது. சமீப காலமாக, இந்த ஏரியில் ஆகாய தாமரை படர்ந்து, ஏரி நீர் மாசடைந்து, துர்நாற்றம் வீசியது.
அதனால், ஏரியை சீரமைக்கக்கோரி அப்பகுதிவாசிகள், சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தனர்.
இது தொடர்பாக, நம் நாளிதழிலும் செய்திகள் வெளியிட்டிருந்தோம்.
அதன் விளைவாக, நகராட்சி நிர்வாகம் சார்பில் ஏரியில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றப்பட்டு, கழிவு நீரை வெளியேற்ற புதிதாக வடிகால்வாய் அமைக்கப்பட்டு, ஏரியை சீரமைக்கும் பணி நேற்று துவங்கியது.
இப்பணிகளை விரைவில் முடித்து, ஏரியை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் கார்த்திக், கமிஷனர் தாமோதரன் கூறியதாவது:
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சிறிய தாங்கல் ஏரி பராமரிப்பு பணிக்கு, நகராட்சி பொது நிதியிலிருந்து, 1.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
இப்பணியின் முதல் கட்டமாக, ஏரியில் தேங்கியுள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, அதில் உள்ள கழிவு நீரை வெளியேற்றப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுற்றியுள்ள வீடுகளின் கட்டடத்தில் இருந்து, இந்த ஏரியில் இணையும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஏரியை துார் வாரி, அதில் மழை நீரை சேமித்து, மறு சுழற்சி முறையில் பயன்பெறும் வகையில், இந்த ஏரியை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணிகள், மூன்று மாத காலத்தில் நிறைவடையும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.