/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்
/
கோவில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்
ADDED : பிப் 27, 2025 11:52 PM

திருப்போரூர்,திருப்போரூர் கந்தசுவாமி கோவில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள், கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டன.
திருப்போரூரில், புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக கந்தசுவாமி கோவில் உள்ளது.
இந்த கோவிலை ஒட்டி, சரவணப் பொய்கை குளம் அமைந்துள்ளது.
பக்தர்கள் இக்குளத்தில் நீராடி, கந்த பெருமானை வழிபட்டுச் செல்கின்றனர்.
கடந்த 400 ஆண்டுகளாக வற்றாத நிலையில் உள்ள இந்த திருக்குளம்,இப்பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.
கோவிலைச் சுற்றிஉள்ள வீடுகளில் கிணறு, போர்வெல் ஆகியவற்றுக்கு, நிலத்தடி நீர் மட்டத்தை குறையாமல் பார்த்துக் கொள்வதில், இந்த திருக்குளம் முக்கிய பங்காற்றுகிறது.
இந்நிலையில், இக்குளத்தில் சில நாட்களாக, மீன்கள் இறந்து மிதந்தன.
பக்தர்கள் குளிக்கும் போது துர்நாற்றம் வீசுவதால், முகம் சுளிக்கின்றனர். இந்த மீன்களை அகற்றும்படி, வேண்டுகோள் விடுத்தனர்.
இதையடுத்து, கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், இறந்து மிதந்த மீன்களை தொழிலாளர்கள் அகற்றினர்.
மீன்கள் இறந்ததற்கான காரணம் குறித்து கண்டறியும்படி, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.