/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்தட பாதையில் மரக்கிளைகள் அகற்றம்
/
மின்தட பாதையில் மரக்கிளைகள் அகற்றம்
ADDED : ஆக 19, 2024 12:14 AM

மாமல்லபுரம் : மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், அதே பகுதி மற்றும் மாமல்லபுரம் பகுதிகளுக்கு, மின்சாரம் வினியோகிக்கும் உயரழுத்த, தாழ்வழுத்த மின்தடங்கள் உள்ளன.
புதுச்சேரி சாலையை ஒட்டியுள்ள மின்தடங்களில், சாலையோரம் வளர்க்கப்பட்டுள்ள மரங்களின் கிளைகள் நீண்டு வளர்ந்துள்ளன. கிளைகளுக்குள் மின்கம்பிகள் சிக்கி, அடிக்கடி அறுந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பேரூராட்சி நிர்வாகத்தின் திறந்தவெளி பூங்கா வளாகத்தில் உள்ள மின்மாற்றியையும் புதர் சூழ்ந்து, மின் பழுது ஏற்பட்டதால், மின்மாற்றியில் பராமரிக்க முடியவில்லை.
இதுகுறித்து, நேற்று முன்தினம் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மாமல்லபுரம் மின்வாரிய ஊழியர்கள், மரக்கிளைகளை அகற்றினர்.