/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருநீர்மலை ஏரியில் சீரமைப்பு பணி துவக்கம்
/
திருநீர்மலை ஏரியில் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 10, 2024 08:55 PM
திருநீர்மலை:தாம்பரம் அடுத்த திருநீர்மலையில், பொதுப்பணித் துறைக்கு சொந்தமான, 194.01 ஏக்கர் பரப்பு ஏரி உள்ளது. சென்னை புறவழிச்சாலை அமைக்கும் போது இந்த ஏரி, மேற்கு - கிழக்கு என, இரண்டாக பிரிந்தது.
சுற்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகள் அதிகரித்ததால், 146.94 ஏக்கராக குறைந்து விட்டது. முறையாக பராமரிக்காததால், மெப்ஸ் ஏற்றுமதி வளாக கழிவுநீர், பல ஆண்டுகளாக கலந்து வருகிறது.
இந்த ஏரியை துார்வாரி, ஆழப்படுத்தி, மழைநீர் தேக்கமாக மாற்றி பராமரிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த ஏரியை சுத்தப்படுத்த, இ.எப்.ஐ., என்ற தனியார் நிறுவனத்திற்கு, பொதுப்பணித் துறை அனுமதி வழங்கியுள்ளது.
அந்நிறுவனம், ஏரி ஆகாயத்தாமரையை அகற்றி சுத்தப்படுத்துதல், கரையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுதல், கரையில் மண்ணை கொட்டி பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது.
இப்பணியை, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், நேற்று மாலை துவக்கி வைத்தார். 85 நாட்களில் மேற்கண்ட பணி முடியும் என, அதிகாரிகள் கூறினர்.