/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் - சூணாம்பேடு கூடுதல் பஸ் விட கோரிக்கை
/
மதுராந்தகம் - சூணாம்பேடு கூடுதல் பஸ் விட கோரிக்கை
ADDED : மே 21, 2024 11:42 PM
சித்தாமூர், : சூணாம்பேடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் புத்திரன்கோட்டை, நுகும்பல், இல்லீடு மணப்பாக்கம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் வசிக்கும் பெரும்பாலானோர் சித்தாமூர், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.
சித்தாமூர் மற்றும் மதுராந்தகத்தில் அரசு, தனியார் பள்ளிகள், வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கி போன்றவை உள்ளன.
இதனால், சூணாம்பேடு பகுதியில் இருந்து, தினமும் 100க்கும் மேற்பட்டோர் பேருந்துகள் வாயிலாக மதுராந்தகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், சூணாம்பேடு - மதுராந்தகம் வரை தடம் எண் 'டி-9' என்ற ஒரேயொரு அரசு பேருந்து மட்டும் இயக்கப்படுகிறது.
பள்ளி மற்றும் கல்லுாரி நாட்களில் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாமல் கடும் அவதிப்படுகின்றனர்.
இடநெருக்கடியால் பேருந்தில் பயணிக்க போதிய இடம் இல்லாமல், படிக்கட்டில் தொங்கியபடி அபாயகரமாக பயணம் செய்து வருகின்றனர்.சென்னை முதல் மதுராந்தகம் மற்றும் சூணாம்பேடு வழியாக புதுச்சேரிக்கு பேருந்து இயக்கப்படுகின்றன.
இந்த பேருந்துகள் பூங்குணம், பழவூர், கன்னிமங்கலம், கல்பட்டு, கூனங்கரணை உள்ளிட்ட கிராமங்களில் நின்று செல்வது இல்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், மதுராந்தகம் - சூணாம்பேடு இடையே கூடுதலாக அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் மாநகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

