/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கடுக்கலுார் சுகாதார நிலையத்தை தினசரி செயல்படுத்த கோரிக்கை
/
கடுக்கலுார் சுகாதார நிலையத்தை தினசரி செயல்படுத்த கோரிக்கை
கடுக்கலுார் சுகாதார நிலையத்தை தினசரி செயல்படுத்த கோரிக்கை
கடுக்கலுார் சுகாதார நிலையத்தை தினசரி செயல்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 23, 2024 04:07 PM

சித்தாமூர்:
சித்தாமூர் அடுத்த கடுக்கலுார் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவசர மருத்துவ தேவைக்கு, 7 கி.மீ., தொலைவில் உள்ள சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.
வெடால், ஒத்திவிளாகம், சூரக்குப்பம், கடுக்கலுார் உள்ளிட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில், கடுக்கலுார் ஊராட்சியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
அதன் விளைவாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், 20 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய அரசு துணை சுகாதார நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால், துவங்கப்பட்ட நாளில் இருந்து, சுகாதார நிலையத்தில் வாரம் ஒரு முறை கர்ப்பிணியருக்கு பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி மட்டும் போடப்பட்டு வருகிறது.
ஆகையால், அவசர சிகிச்சை, முதலுதவி, சாதாரண காய்ச்சல், சளி மற்றும் தலைவலி போன்ற நோய்களுக்கு, சூணாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கே மீண்டும் சென்று வரவேண்டிய நிலை தொடர்கிறது.
எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருதி, மருத்துவர் அல்லது செவிலியர் நியமனம் செய்து, கடுக்கலுார் துணை சுகாதார நிலையத்தை தினமும் செயல்படும் வகையில் மேம்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.