/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமான சிக்னல் கம்பங்கள் மீண்டும் அமைக்க கோரிக்கை
/
சேதமான சிக்னல் கம்பங்கள் மீண்டும் அமைக்க கோரிக்கை
ADDED : மே 18, 2024 12:14 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அருகே, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும், சாலையின் மைய தடுப்புகள், சாலையின் இரு பக்கங்களிலும், புறவழிச்சாலைகளிலும் மின் கம்பங்கள் மற்றும் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டன.
அய்யப்பன் கோவில் பகுதி, காவேரி காம்ப்ளக்ஸ் பகுதி, அரசு பள்ளி பகுதி, ரயில்வே சாலை பகுதி என, தேசிய நெடுஞ்சாலையில், 2 கி.மீ., துாரத்திற்குள், கடந்த ஒரு மாதத்திற்குள், ஐந்துக்கும் அதிகமான விபத்துகள் நடந்தன.
இதனால் சேதமான மின் கம்பங்களை அப்புறப்படுத்தி பல நாட்களாகியும், மீண்டும் சீரமைக்கப்படாமல், அப்படியே சாலை ஓர நடைபாதையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போட்டு வைத்துள்ளனர்.
இதனால், சிக்னல் விளக்குகள் இல்லாத பகுதிகளில், மீண்டும் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, சேதமான சிக்னல் கம்பங்கள் இருந்த பகுதிகளில், மீண்டும் சிக்னல் கம்பங்களை அமைத்து தர, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

