/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அனுமந்தை சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
/
அனுமந்தை சாலை பணி விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஆக 27, 2024 01:12 AM

மறைமலை நகர் : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் ஊராட்சியில், குண்ணவாக்கம் - அனுமந்தை ஏரிக்கரை சாலை, 2.கி.மீ., துாரம் உடையது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இந்த சாலை, தற்போது சிதிலமடைந்து, வாகன ஓட்டிகள் சென்று வர அவதியடைந்தனர்.
இதையடுத்து, புதிய சாலை அமைக்க, இரண்டு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கப்பட்டு, சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு உள்ளன.
ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்தும், மீண்டும் பணிகள் துவங்காததால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இருசக்கர வாகனங்களின் டயர்களில் ஜல்லிக்கற்கள் குத்தி பஞ்சராகின்றன. இதன் காரணமாக, வேலைக்கு செல்ல தடை ஏற்படுவதாக, வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். எனவே, இந்த சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.