/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாலச்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
/
மாலச்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
மாலச்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
மாலச்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
ADDED : மார் 01, 2025 11:34 PM

பவுஞ்சூர், :பவுஞ்சூர் அருகே கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துார் மாலச்சேரி பகுதியில், அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இதில் 1 முதல் 5ம் வகுப்பு வரை, 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகிறனர்.
பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி இல்லை. பள்ளி வயல்வெளிக்கு அருகே உள்ளதால், பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் வர வாய்ப்பு உள்ளது.
மேலும், பள்ளி வளாகத்தில் கால்நடைகள் உலா வருவதால், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாலச்சேரி அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.