/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய ஊராட்சிக்கு அலுவலக கட்டடம் கட்ட கோரிக்கை
/
புதிய ஊராட்சிக்கு அலுவலக கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 11:26 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் ஒன்றியம், கெண்டிரச்சேரியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக கட்டடம் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தற்போது, இ -- சேவை மையத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. எனவே, புதிதாக ஊராட்சி அலுவலகக் கட்டடம் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, பழைய ஊராட்சி அலுவலக கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிய கட்டடம் அமைக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

