/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊத்துக்குழி டாஸ்மாக் கடையை மூட வேண்டுகோள்
/
ஊத்துக்குழி டாஸ்மாக் கடையை மூட வேண்டுகோள்
ADDED : பிப் 25, 2025 11:54 PM
திருப்போரூர்ஊத்துக்குழியில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூர் ஊராட்சியில் அடங்கியது ஊத்துக்குழி கிராமம். இங்கு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. சுற்றுவட்டார பகுதியிலிருந்து அதிக அளவிலான மது பிரியர்கள், மது வாங்கி அருந்த இங்கு வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலும், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும் என, பெற்றோர்கள் கவலையடைகின்றனர். எனவே, இந்த மதுக்கடையை மூட வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, அப்பகுதிவாசிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசனிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.