/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்னல்சித்தாமூர் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
/
மின்னல்சித்தாமூர் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
மின்னல்சித்தாமூர் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
மின்னல்சித்தாமூர் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை
ADDED : மே 30, 2024 09:55 PM

அச்சிறுபாக்கம்,:தொழுப்பேடு- - ஒரத்தி வழியாக, வந்தவாசி செல்லும் மாநில நெடுஞ்சாலை ஓரம் உள்ள மின்னல்சித்தாமூர் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், நெடுங்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தில், 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர்.
தற்போது, சில மாதங்களுக்கு முன், கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு, பயன்படுத்த முடியாதவாறு பாழானதால், தற்காலிகமாக மாற்று கட்டடத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
தொழுப்பேடு- - வந்தவாசி மாநில நெடுஞ்சாலையை கடந்து, குழந்தைகளை அழைத்துக் கொண்டு, அங்கன்வாடி மையத்திற்கு கூட்டி செல்வதால், விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, அதே பகுதியில் புதிதாக அங்கன்வாடி மைய கட்டடம் அமைத்து தர, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அங்கன்வாடி மையக் குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.