/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்
/
அபாய மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்
அபாய மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்
அபாய மேல்நிலை குடிநீர் தொட்டி இடித்து அகற்ற வேண்டுகோள்
ADDED : மார் 08, 2025 11:46 PM

மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், குண்ணவாக்கம் பகுதியில் 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வெளியூரைச் சேர்ந்த பலர் இங்கு வாடகைக்கு தங்கி, மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு குண்ணவாக்கம் -- பட்டரவாக்கம் சாலை அருகில், 25 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 30,000 லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது. இதையடுத்து இதே பகுதியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது, பழைய நீர்த்தேக்க தொட்டி துாண்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே, இந்த தொட்டியை இடித்து அகற்ற வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
குடியிருப்புகளுக்கு இடையே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகிலேயே பட்டரவாக்கம் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த வழியாக செல்லும் குழந்தைகள் தண்ணீர் தொட்டி அருகில் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன.
எனவே, இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.