/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 08, 2024 06:32 AM
செய்யூர் : செய்யூர் பஜார் வீதியில், தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு, தினசரி நுாற்றுக்கணக்கான பயனாளிகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்தல், சொத்து மதிப்புச்சான்று, நில அளவைக்கு பதிவு செய்தல், பட்டா பெயர் மாற்றம்என, பல்வேறு சேவைகளுக்காக வந்துசெல்கின்றனர்.
தாசில்தார் அலுவலகத்தில், ஊழியர்களுக்கு மட்டும் துணை வட்டாட்சியர் அறையில், கேன் தண்ணீர் வைக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அலுவலகத்திற்கு வந்து செல்லும் பயனாளிகளுக்கு, பொது குடிநீர் வசதி இல்லாததால், அலுவலகத்தில் காத்திருக்கும் குழந்தைகள், முதியோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, தாசில்தார் அலுவலகத்தில் மினி டேங்க் அமைத்து, அதன் வாயிலாக அலுவலகத்திற்கு வந்து செல்லும் பயனாளிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.