/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொலம்பாக்கம் சமுதாய கூடத்தை மேம்படுத்த வேண்டுகோள்
/
பொலம்பாக்கம் சமுதாய கூடத்தை மேம்படுத்த வேண்டுகோள்
ADDED : செப் 07, 2024 07:36 AM
சித்தாமூர் : சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, மக்கள் பயன்பாட்டிற்காக, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், சித்தாமூர் - சோத்துப்பாக்கம் சாலை ஓரத்தில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டது.
சரவம்பாக்கம், பொலம்பாக்கம், பேரம்பாக்கம், அனந்தமங்கலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்கள், தங்களது குடும்பங்களின் நிச்சயதார்த்தம், திருமணம், பிறந்த நாள் விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை, சமுதாயக் கூடத்தில் நடத்தி வந்தனர்.
முறையான பராமரிப்பு இல்லாமல், நாளடைவில் சமுதாயக்கூடத்தின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. மேலும், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி இல்லாததால், சமுதாயக்கூடத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதை, அப்பகுதிவாசிகள் தவிர்த்து வருகின்றனர். சித்தாமூர், சோத்துப்பாக்கம், அச்சிறுபாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் மண்டபங்களில், அதிக செலவு செய்து, சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இப்பகுதி மக்களின் நலன் கருதி, சமுதாய நலக்கூடத்தை மேம்படுத்தி, அதன் வாயிலாக ஊராட்சிக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.