/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கயப்பாக்கம் சாலை சந்திப்பில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
/
கயப்பாக்கம் சாலை சந்திப்பில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
கயப்பாக்கம் சாலை சந்திப்பில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
கயப்பாக்கம் சாலை சந்திப்பில் மின்விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2024 11:52 PM

சித்தாமூர்:அச்சிறுபாக்கம் - போந்துார் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் இடையே, கயப்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் முக்கிய சந்திப்பு உள்ளது.
கோட்டைப்புஞ்சை, பேட்டை, கயப்பாக்கம், சின்னகயப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள், இந்த சாலை சந்திப்பை பயன் படுத்துகின்றனர்.
இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து, லாரி என, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சாலை சந்திப்பை கடந்து செல்கின்றன.
பல ஆண்டுகளாக சாலை சந்திப்பு இருளில் மூழ்கி உள்ளதால், அங்கு உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படாததால், சாலை சந்திப்பு போதிய வெளிச்சம் இன்றி, இரவு நேரத்தில் இருளில் மூழ்கி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. அதனால், வாகன ஓட்டிகள் விபத்து அச்சத்துடனேயே சாலை சந்திப்பை கடந்து செல்கின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.