/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
/
கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
கலெக்டர் அலுவலகம் பகுதியில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 02, 2024 01:17 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மலையடிவேண்பாக்கம் கிராமத்தில், கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. இந்த அலுவலகங்களுக்கு, அரசு ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் தினசரி வந்து செல்கின்றனர்.
கலெக்டர் அலுவலகம் உள்ள பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், மாலை நேரங்களில் பணிமுடித்து வரும் ஊழியர்கள், பொதுமக்கள் பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்கின்றனர்.
ஆனால், இப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதனால், அச்சுத்துடனேயே பெண்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. இருளை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் மர்மநபர்கள், இப்பகுதியில் பேருந்துக்காக காத்திருக்கும் பெண்களிடம் நகை பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கிறது.
அதனால், இப்பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கலெக்டரிடம் வலியுறுத்தினர். இதைத்தொடர்ந்து, உயர் கோபுர மின் விளக்கு அமைக்க, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண்ராஜ், கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த உத்தரவை இன்று வரை செயல்படுத்தாமல், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்கருதி, உயர்கோபுர மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.