/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
களத்துாரில் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
/
களத்துாரில் ரேஷன் கடை திறக்க கோரிக்கை
ADDED : ஆக 25, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஒன்றியத்தில், களத்துார் ஊராட்சி உள்ளது. இங்கு, 250க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நியாயவிலை கட்டடம், பழுதடைந்து உள்ளது.
தற்போது, கட்டடத்தின் சில பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால், மழை காலங்களில் மழைநீர் ஒழுகி, அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வீணாகின்றன.
எனவே, பழைய நியாய விலை கட்டடத்தினை, தற்போதைக்கு வேறு இடத்திற்கு மாற்றி, பழைய கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தரக்கோரி, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.