/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்மாற்றி கம்பம் சேதம் சீரமைக்க வேண்டுகோள்
/
மின்மாற்றி கம்பம் சேதம் சீரமைக்க வேண்டுகோள்
ADDED : ஜூலை 18, 2024 12:05 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த தத்தாத்ரேயா கோவில் வழியாக, பெரும்பேர்கண்டிகை ஊராட்சிக்கு செல்லும் வழியில் உள்ள மின் மாற்றி கம்பம் சேதமடைந்து உள்ளது.
இதன் கம்பங்கள், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகளுடன் பலம் இழந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இந்த மின்மாற்றி சாலையோரம் உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்துள்ள மின்மாற்றியின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மின்மாற்றியின் அருகிலேயே உள்ள மரத்தின் கிளைகள் அடர்ந்து, மின்கம்பிகள் மீது உரசியபடி உள்ளன.
அதனால், அப்பகுதியில் மின் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சாலையோரம் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, மின் இணைப்புகளை சரி செய்ய வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.