/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அறிவுசார் மையம் அமைக்க கோரிக்கை
/
அறிவுசார் மையம் அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 11, 2024 02:23 AM
சதுரங்கப்பட்டினம்:சதுரங்கப்பட்டினத்தில், அறிவுசார் மையம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அப்பகுதி கல்வி ஆர்வலர் ஆனந்த் கூறியதாவது:
கல்பாக்கம் அருகில், சதுரங்கப்பட்டினம் ஊராட்சி பகுதி உள்ளது. 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு கல்வி வளர்ச்சி ஏற்பட்டு, பட்டதாரிகள் ஏராளமானோர் உள்ளனர்.
ஆனால், வேலைவாய்ப்பிற்கேற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள இயலாமல், வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அணுசக்தி துறை, டி.என்.பி.எஸ்.சி., யு.பி.எஸ்.சி., உள்ளிட்ட வேலை வாய்ப்புகளுக்கான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள, இப்பகுதி இளைஞர்களுக்கு போதிய பயிற்சி இல்லை.
அதனால், இப்பகுதியினருக்கு தேர்வுகள் குறித்து பயிற்சியளிக்க, இங்கு அறிவுசார் மையம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.