/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய வளைவுப் பகுதியில் தடுப்பு அமைக்க கோரிக்கை
/
அபாய வளைவுப் பகுதியில் தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : மே 15, 2024 10:44 PM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அருகே முகையூர் - -கொடூர் செல்லும் 2.3 கி.மீ., அளவுடைய தார் சாலை உள்ளது. தினசரி, ஏராளமான வாகனங்கள் சாலை கடந்து செல்கின்றன.
வயல்வெளிக்கு நடுவே உள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் தங்கள் வயல்வெளிக்கு சென்றுவர, இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
கொடூர் பகுதியில், அகஸ்தீஸ்வரர் கோவில் அருகே சாலையில் அபாய வளைவுப்பகுதி உள்ளது. சாலை ஓரத்தில் தடுப்பு இல்லாததால், இரவு நேரங்களில் அதிவேகமாக வளைவு பகுதியை கடக்கும்போது, அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது.
இதனால், வாகன ஓட்டிகள் பலர், அப்பகுதியை கடக்கும் போது அச்சமடைகின்றனர்.
எனவே, பெரும் விபத்து ஏற்படுவதற்குள், சாலை ஓரத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.