/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுகோள்
/
பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டுகோள்
ADDED : மே 30, 2024 09:54 PM
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 15-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மேட்டு கிராமம் ஆகும். இங்கு, 250க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் வாங்கி செல்ல, 8 கி.மீ., துாரத்தில், அச்சிறுபாக்கம் தனியார் பள்ளி எதிரே உள்ள நியாய விலை கடைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால், வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் மற்றும் வயதானவர்கள் ரேஷன் கடைக்கு வந்து செல்ல பெரும் சிரமமாக உள்ளது.
மேட்டு கிராமத்தில், பகுதி நேர நியாய விலைக் கடை அமைத்து தரக் கோரி, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே, இது குறித்து கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.