/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வலையில் சிக்கிய குரங்கு குட்டி மீட்பு
/
வலையில் சிக்கிய குரங்கு குட்டி மீட்பு
ADDED : மே 14, 2024 08:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த மணமை பகுதியில் உள்ள அம்மன் கோவில் அருகில், நேற்று மாலை 5:30 மணிக்கு, குரங்குகள் அதன் ஆறு மாத குட்டியுடன் திரிந்தன.
அப்போது, கோவிலின் மேற்புறத்தில் இருந்த மீன்பிடி வலையில், குரங்கு குட்டி சிக்கியது. தாய் குரங்கு, அங்கு எவரையும் செல்ல விடாமல் தவித்தது.
அப்பகுதியினர், இதுகுறித்து மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்களிடம் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் இன்பராஜ் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று, குட்டியை பாதுகாப்பாக மீட்டனர்.

