/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
/
செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
செங்கையில் சேதமான சிறுபாலம் சீரமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை
ADDED : செப் 01, 2024 11:54 PM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு நகராட்சி, வேதாசலம் நகரில், அழகேசன் - தேவதாஸ் தெருவில், சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வழியாக, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளாமானோர் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய், தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், புதிதாக சிறுபாலம் மற்றும் மழைநீர் கால்வாய் கட்டித்தர வேண்டும் என, கவுன்சிலர் மற்றும் அப்பகுதிவாசிகள் நகராட்சி நிர்வாகத்திடம், மனு அளித்தனர்.
அதன்பின், ஆணையர் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்து, சிறுபாலம், மழைநீர் கால்வாய் கட்ட, 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித்தரப்படும் என, தெரிவித்தனர்.
எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன், சிறுபாலம், மழைநீர் கால்வாய் பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.