/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலமையூரில் பன்றி தொல்லை குடியிருப்பு வாசிகள் அவஸ்தை
/
மேலமையூரில் பன்றி தொல்லை குடியிருப்பு வாசிகள் அவஸ்தை
மேலமையூரில் பன்றி தொல்லை குடியிருப்பு வாசிகள் அவஸ்தை
மேலமையூரில் பன்றி தொல்லை குடியிருப்பு வாசிகள் அவஸ்தை
ADDED : ஆக 25, 2024 11:20 PM

மறைமலை நகர்: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மேலமையூர் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தெருக்களில் நாளுக்கு நாள் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகின்றன.
தெருக்களின் ஓரம் கொட்டப்பட்டு உள்ள குப்பையை கிளறுவதால், துர்நாற்றம் வீசுவதோடு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்,
இதுகுறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
செங்கல்பட்டில் மேலமையூர், குண்டூர், ராம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பன்றித் தொல்லை அதிகரித்து வருகிறது. இவை திறந்தவெளியில் திரிவதால், கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து எழுந்து சகதியாக தெருக்களில் வருகின்றன.
இதன் காரணமாக, குழந்தைகள் தெருக்களில் விளையாட அச்சப்படுகின்றனர். குப்பையை கிளறுவதால் அவை காற்றில் தெருக்களில் பரவுகின்றன. சாலைகளில் அடிக்கடி குறுக்கே செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, இப்பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.