/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தெருக்களில் பன்றிகள் உலா குடியிருப்புவாசிகள் பீதி
/
தெருக்களில் பன்றிகள் உலா குடியிருப்புவாசிகள் பீதி
ADDED : ஆக 09, 2024 11:32 PM

மறைமலை நகர் : மறைமலை நகர் நகராட்சி 20வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீவாரி நகர் மற்றும் பராசக்தி நகரில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நாளுக்கு நாள் பன்றிகளின் தொல்லை அதிகரித்து வருவதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து குடியிருப்பு வாசிகள் கூறியதாவது:
பராசக்தி நகர் மற்றும் அருகில் உள்ள சிங்கபெருமாள் கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் பன்றிகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன.
தெருக்களின் ஓரம் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும்போது திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.
எனவே, குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக உள்ள பன்றிகளை பிடிக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.