/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு
/
உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்க எதிர்ப்பு
ADDED : மே 07, 2024 11:53 PM

கூவத்துார்:கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடலுார் காலனி பகுதியில், நீண்ட நாட்களாக தாழ்வழுத்த மின் வினியோகம் காரணமாக, அப்பகுதிவாசிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், கிராமத்தின் வெங்காட்டுத் தெரு பகுதியில் உள்ள 11 கே.வி., உயர் அழுத்த மின்மாற்றியில் இருந்து, பிரதான சாலை வழியாக, காலனி பகுதிக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் வாயிலாக, மின்சாரம் எடுத்துச் சென்று, மின் பற்றாக்குறையை போக்க, மின்சாரத்துறை அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
நேற்று, அதற்கான மின் கம்பம் நடும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
விவசாயத்திற்கு செல்லும் நெல் அறுவடை இயந்திரங்கள், டிராக்டர்கள் போன்ற கனரக வாகனங்கள் செல்லும் பிரதான சாலை வழியாக உயர் அழுத்த மின் கம்பிகள் அமைத்தால், அடிக்கடி விபத்து ஏற்படும்.
ஆகையால், மாற்றுப் பாதையில் மின் கம்பங்கள் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கூவத்துார் போலீசார், கிராம மக்களிடம் பேச்சு நடத்தி, மாற்றுப் பாதையில் மின் கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்த பின், கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

