/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
/
வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூன் 06, 2024 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாமல்லபுரம், : கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில், முதுநிலை வருவாய் ஆய்வாளர், 'பிர்கா' எனப்படும் குறுவட்டங்களில், வருவாய் ஆய்வாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஓரிடத்தில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றியவர்களை, மாவட்ட வருவாய் அலுவலர் வாயிலாக வேறிடம் மாற்றப்படுவது வழக்கம்.
அலுவலகங்களில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர்கள், குறுவட்டத்திற்கும்; குறுவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றியவர்கள், அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் நியமிக்கப்படுவர்.
தற்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றிய 34 பேரை, பணியிடம் மாற்றி உத்தரவிட்டுள்ளார்.