/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரிதாப நிலையில் ஆர்.ஐ., அலுவலகம் புதிய கட்டடம் அமைப்பது எப்போது?
/
பரிதாப நிலையில் ஆர்.ஐ., அலுவலகம் புதிய கட்டடம் அமைப்பது எப்போது?
பரிதாப நிலையில் ஆர்.ஐ., அலுவலகம் புதிய கட்டடம் அமைப்பது எப்போது?
பரிதாப நிலையில் ஆர்.ஐ., அலுவலகம் புதிய கட்டடம் அமைப்பது எப்போது?
ADDED : மே 26, 2024 01:50 AM

திருப்போரூர்:திருப்போரூர் வட்டத்தில் திருப்போரூர், பையனுார், மானாமதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் என, ஆறு உள்வட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு உள்வட்டத்திலும் ஒரு வருவாய் ஆய்வாளர் நியமிக்கப்பட்டு உள்ளார். வருவாய் ஆய்வாளர் தங்கி பணிபுரிய குடியிருப்புடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
கரும்பாக்கம் உள்வட்டத்தில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடங்கியுள்ளன. இங்குள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலக கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, இது சேதமடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
தற்காலிகமாக அருகே உள்ள நுாலக கட்டடத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. அக்கட்டடத்தில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதியும் இல்லை. மேலும், நுாலகத்திற்கு வந்து படிக்கும் வாசகர்களுக்கும் இடையூறு உள்ளது.
எனவே, ஊராட்சி ஒன்றிய நிதி அல்லது பொதுப்பணித்துறை மூலம் அனைத்து வசதிகளுடன் கூடிய வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.