/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்
/
100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்
100 நாள் வேலை வழங்க வேண்டி சரவம்பாக்கத்தில் சாலை மறியல்
ADDED : பிப் 28, 2025 11:50 PM

சித்தாமூர், மதுராந்தகம் ஒன்றியம், சரவம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கடந்த நான்கு மாதங்களாக, மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், கிராம மக்களுக்கு வேலை வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று, மேய்க்கால் புறம்போக்கு இடத்தில் மரக்கன்றுகள் நட பணி ஆணை வழங்கப்பட்டு, பணி துவங்கப்பட்டது.
அப்போது, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபர்கள், மரக்கன்றுகள் நட எதிர்ப்பு தெரிவித்ததால், பணி நிறுத்தப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், சரவம்பாக்கம் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த சித்தாமூர் போலீசார் பேச்சு நடத்தி, ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, நுாறு நாள் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்படி, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.