/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை ஒப்பந்த பணியாளர்கள் மின்சாரம் பாய்ந்து படுகாயம்
/
சாலை ஒப்பந்த பணியாளர்கள் மின்சாரம் பாய்ந்து படுகாயம்
சாலை ஒப்பந்த பணியாளர்கள் மின்சாரம் பாய்ந்து படுகாயம்
சாலை ஒப்பந்த பணியாளர்கள் மின்சாரம் பாய்ந்து படுகாயம்
ADDED : ஆக 29, 2024 10:30 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - நெல்லிக்குப்பம் சாலை மற்றும் பெருமாட்டுநல்லுார் கூட்டுச் சாலையில், மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில், சில நாட்களாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
நேற்று, ஒப்பந்த ஊழியரான திருவள்ளூர் மாவட்டம், ஒத்திக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ், 23, ராஜ்குமார், 30, ஆகியோர், பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சாலை ஓரம் உள்ள மின் கம்பங்களை அகற்றுவதற்காக, மின் இணைப்பை துண்டித்து விட்டு, எர்த் ராடு போடாமல் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை துண்டித்துள்ளனர்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து, இருவரும் மின் கம்பியில் பலத்த காயங்களுடன் தொங்கினர். உடன் பணிபுரிந்தவர்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆகாஷ், காயரம்பேடு தனியார் மருத்துவமனையிலும், ராஜ்குமார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி மின் வாரிய அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.

