/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை சீரமைப்பு பணிகள் ஊரப்பாக்கத்தில் துவக்கம்
/
சாலை சீரமைப்பு பணிகள் ஊரப்பாக்கத்தில் துவக்கம்
ADDED : ஜூன் 12, 2024 11:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் பிரதான சாலை, ஜல்லிக்கற்கள் பெயர்ந்தும், குண்டும் குழியுமாகவும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையிலும் இருந்தது.
இது தொடர்பாக, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, ஊரப்பாக்கம் ஊராட்சி சார்பில் பிரியா நகர் ஆர்ச் நுழைவாயிலில் இருந்து, ஐந்து கண் வராகி பாலம் வரை உள்ள 482 மீட்டர் தொலைவுக்கு பிரதான சாலையை சிமென்ட் சாலையாக அமைக்க, 29 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, நேற்று சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்டன.