/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலை ஓர பள்ளங்களால் செங்குன்றத்தில் ஆபத்து
/
சாலை ஓர பள்ளங்களால் செங்குன்றத்தில் ஆபத்து
ADDED : ஆக 04, 2024 10:34 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 21வது வார்டில் சிங்கபெருமாள் கோவில் -- மெல்ரோசாபுரம் செல்லும் 3 கி.மீ., சாலை உள்ளது.
இந்த சாலையை, சிங்கபெருமாள் கோவில், நரசிங்கபுரம் காலனி, சின்ன செங்குன்றம், இந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிவாசிகள் மறைமலை நகர் சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று வர பயன்படுத்துகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் உள்ள பள்ளி மாணவ - மாணவியரும், சைக்கிள்களில் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த சாலையில், பேருந்து வசதி இல்லாததால், அதிக அளவில் இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், சின்ன செங்குன்றம் பகுதியில் காப்புக்காடு பகுதியில் உள்ள வளைவில், 1 கி.மீ., துாரம் சாலையின் இருபுறமும் மண் கொட்டி சமன் செய்யப்பட்டாததால், பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாலை ஓரங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் உள்ளதால், கனரக வாகனங்கள் செல்லும் போது ஒதுங்கி வழி விட மிகவும் சிரமமாக உள்ளது. புதிதாக வரும் வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.
எனவே, இந்த பள்ளங்களை சீரமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.