/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊரப்பாக்கத்தில் சாலைகள் படுமோசம்
/
ஊரப்பாக்கத்தில் சாலைகள் படுமோசம்
ADDED : மே 04, 2024 09:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் ஒன்று பிரதான சாலையில் இருந்து, அருள் நகர் செல்லும் சாலை வரை, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இந்த சாலையை சீரமைக்க வேண்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், இச்சாலை வழியே தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர். எனவே, சேதமான சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.