/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பின் பாய் மரப்படகு வாகை சூடியது
/
ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பின் பாய் மரப்படகு வாகை சூடியது
ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பின் பாய் மரப்படகு வாகை சூடியது
ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப்பின் பாய் மரப்படகு வாகை சூடியது
ADDED : மே 07, 2024 04:29 AM

சென்னை, : சென்னையில், இந்திய படகு சங்கத்தின் சார்பில், யூனிபை கேபிடல் மூன்றாவது பாய்மர படகு போட்டி, நான்கு நாட்களாக நடந்தது. இதில் ஆறு அணிகள் பங்கேற்றன. ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் எண்ணுார் கிளப் அணிகளுக்கு இடையில், கடுமையான போட்டி நிலவியது.
கடலில் அதிக வெப்பம், பலத்த தென்மேற்கு காற்று, 2 மீ., உயர அலைகள் என, படகு சவாரிக்கு எதிரான சூழல் இருந்ததால் பயணம் கடினமாக இருந்தது. இந்நிலையில், முருகன் நாடார் தலைமையிலான எண்ணுார் ராயல் மெட்ராஸ் யாட்ச் கிளப் முதலிடத்தை பிடித்து கோப்பையை வென்றது. அடுத்து, சின்ன ரெட்டி தலைமையிலான மத்திய ரிசர்வ் காவல் படை அணி இரண்டாம் இடம் பிடித்தது. எண்ணுார் கிளப் மூன்றாம் இடம் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் ரவிக்குமார் திங்கரா, யூனிபை கேபிடல் நிறுவன மேலாண்மை கவுன்சில் ஜார்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் கோப்பைகளை வழங்கினர்.