/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 33 பயனாளிகளுக்கு ரூ.15.60 கோடி கடனுதவி
/
செங்கையில் 33 பயனாளிகளுக்கு ரூ.15.60 கோடி கடனுதவி
ADDED : ஆக 20, 2024 08:06 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், தொழில் மற்றும் வணிகத்துறையினர் செயல்படுத்தும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், நேற்று நடந்தது.
அதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிதி அளிப்பதற்காக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் புதிய தாய்கோ வங்கியின் 48வது கிளையை, அமைச்சர் அன்பரசன் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
மேலும், சென்னை மண்டத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், சுய வேலை வாய்ப்பு திட்டங்களில், 33 பயனாளிகளுக்கு, 2.51 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய, 15.59 கோடி ரூபாய் கடனுதவியை வழங்கினார்.
இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை செயலர் அர்ச்சனா பட்நாய்க், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் நிர்மல்ராஜ், கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.