/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பாக்கத்தில் ரூ.1.60 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
/
புதுப்பாக்கத்தில் ரூ.1.60 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
புதுப்பாக்கத்தில் ரூ.1.60 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
புதுப்பாக்கத்தில் ரூ.1.60 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
ADDED : ஜூலை 07, 2024 12:40 AM

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், வண்டலுார் தாலுகாவிற்கு உட்பட்டது, புதுப்பாக்கம் கிராமம். இக்கிராமத்தில், சர்வே எண் 225/8ல், 18 சென்ட் நிலம் வண்டி பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து, கம்பி வேலி மற்றும் இரும்பு கேட் அமைத்துள்ளனர். இது தொடர்பாக, அப்பகுதிவாசிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா, மாம்பாக்கம் ஆர்.ஐ., முருகேசன், புதுப்பாக்கம் வி.ஏ.ஓ., தமிழ்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின், பொக்லைன் இயந்திரம் வாயிலாக, கம்பி வேலி மற்றும் இரும்பு கேட் போன்ற ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர். இதன் தற்போதைய மதிப்பு, 1.60 கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.