/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காரில் எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்
/
காரில் எடுத்து வந்த ரூ.2 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 10:45 PM
காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலையொட்டி, காஞ்சிபுரம் அடுத்த, பொன்னியம்மன் பட்டறை அருகில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கமல்நாதன் என்பவரது காரை நிறுத்தி சோதனை செய்ததில் 2 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
உரிய ஆவணங்கள் இல்லாததால், 2 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த 2 லட்சம் ரூபாயை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைவாணியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

