/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொன்னேரிக்கரையில் ரூ.47 லட்சம் பறிமுதல்
/
பொன்னேரிக்கரையில் ரூ.47 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 09, 2024 11:38 PM
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில், நிலையான கண்காணிப்புக் குழு மூலம் தேர்தல் அதிகாரி கோமளா தலைமையின் கீழ், போலீசார் கண்காணிப்பு பணியில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் சோதனை செய்து வந்தனர்.
அவ்வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், உரிய ஆவணம் இன்றி, 47 லட்ச ரூபாய் ரொக்கமாக இருந்தது தெரியவந்தது.
காரில் இருந்த மோகன் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தியதில், ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் நிரப்ப கொண்டு செல்வதாக கூறியுள்ளனர்.
உரிய ஆவணம் இல்லாததால், காரில் இருந்த 47 லட்ச ரூபாயை, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியான, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணியிடம் ஒப்படைத்தனர். கருவூலத்தில் ரொக்கத்தை வைக்க அவர் அறிவுறுத்தினார்.
சோத்துப்பாக்கம் பகுதியில், பறக்கும் படையினர் வாகன சோதனையில் நேற்று முன்தினம இரவு ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், காரில் இருந்த 1.41 லட்சம் ரூபாய் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், காரில் வந்தவர் சென்னை, அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வி, 47, என்பது தெரிந்தது.
அப்போது, செஞ்சியில் உள்ள உறவினர் வீட்டில் நடக்கும் காரியத்திற்காக, பணம் எடுத்துச் சென்றதாக பறக்கும் படை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்டதாக, 1.41 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, செய்யூர் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

