/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேலம் - மாமல்லபுரம் அரசு பேருந்து இயக்கம்
/
சேலம் - மாமல்லபுரம் அரசு பேருந்து இயக்கம்
ADDED : மார் 21, 2024 10:47 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம், சர்வதேச சுற்றுலா இடமாகவிளங்குகிறது. இங்குள்ள பல்லவர் கால சிற்பங்களைகாண, தமிழகத்தின் பிற மாவட்ட பகுதிகளிலிருந்து, இங்கு சுற்றுலா வரும் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இத்தகைய சுற்றுலாபகுதிக்கு, தொலைதுாரபகுதிகளிலிருந்து அரசுப் பேருந்து வசதி இல்லை.
இந்நிலையில், முதல் முறையாக சேலத்திலி ருந்து மாமல்லபுரத்திற்கு, அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. சேலம் கோட்டபோக்குவரத்துக் கழகம், இப்பேருந்தை இயக்குகிறது.
சேலத்தில், தினமும் இரவு 10:15க்கு புறப்பட்டு, ஆத்துார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டிவனம்,கிளாம்பாக்கம், வண்டலுார், கேளம்பாக்கம், கோவளம் வழியே, காலை 6:00க்கு மாமல்லபுரத்தை அடையும்.
மாமல்லபுரத்தில், காலை 8:50க்கு புறப்பட்டு, அதே தடத்தில், இரவு 7:30 மணிக்கு சேலத்தை அடையும். சேலம் - மாமல்லபுரம் கட்டணம் 320 ரூபாய். மாமல்லபுரம் - கிளாம்பாக்கம் கட்டணம்45 ரூபாய் என, போக்குவரத்துக் கழகம்அறிவித்துள்ளது.

