/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் உப்பு உற்பத்தி; தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
/
திருப்போரூரில் உப்பு உற்பத்தி; தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
திருப்போரூரில் உப்பு உற்பத்தி; தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
திருப்போரூரில் உப்பு உற்பத்தி; தற்காலிகமாக நிறுத்தி வைப்பு
ADDED : ஜூன் 30, 2024 11:02 PM

திருப்போரூர் : திருப்போரூர்- - நெம்மேலி செல்லும் சாலையில், பகிங்ஹாம் கால்வாயையொட்டி, ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் அரசு நிலங்கள் உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், உப்பு உற்பத்தி குத்தகைக் காலம் நிறைவடைந்ததால், இந்தப்பகுதியில் உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.
இதனால், உப்பளங்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் தரிசாக காட்சியளித்தன. பின், கடந்த 2022ம் ஆண்டு, தமிழக சால்ட் கார்ப்பரேஷன் நிறுவனம், இந்தப் பகுதியில் உப்பளம் அமைப்பதற்காக, வருவாய்த்துறை வாயிலாக, 3,010 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை, 20 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் பெற்றது.
அதில், முதற்கட்டமாக, 500 ஏக்கர் பரப்பளவில் உப்பளம் அமைக்கும் பணிகளை, அந்நிறுவனம் மேற்கொண்டது.
இதில், நிலங்கள் பொக்லைன் இயந்திரங்கள் வாயிலாக சமன்படுத்தப்பட்டு, 50 மீட்டர் அகலம் மற்றும் 50 மீட்டர் நீளம் என்ற அடிப்படையில் பிரிக்கப்பட்டது.
அவை ஒவ்வொன்றிலும் தண்ணீர் தேக்கும் வகையில் கரைகள் உள்ளிட்ட கட்டமைப்புகளை ஏற்படுத்தி, உப்பு தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டது. இதில், உள்ளூர் மற்றும் வெளிமாவட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த 2022 டிச., மாதம் பருவ மழை காரணமாக, பகிங்ஹாம் கால்வாயில் நீர்வரத்து அதிகரித்து, உப்பளம் முழுதும் நீரில் முழ்கியது. இதனால், உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டது.
பின், 2023ல் கோடை வெயில் அதிகரித்தது. இதனால், தொழிலாளர்கள் வாயிலாக உப்பு தயாரிக்கும் பணியை மீண்டும் துவங்கியது. மீண்டும் பருவ மழையில் உப்பளம் முழ்கி பாதிப்பு ஏற்பட்டது.
இவ்வாறு, மழைக்காலங்களில் மழை வெள்ளத்தாலும், கோடை காலங்களில் தேவையான தண்ணீர் வரத்து இல்லாததாலும், திட்டமிட்டபடி உப்பு உற்பத்தி செய்ய முடியவில்லை.
தற்போது, உப்பு உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், தற்காலிகமாக உப்பு உற்பத்திக்கான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.