ADDED : செப் 12, 2024 07:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த வல்லிபுரம் பாலாற்றில் இருந்து, மணல் கடத்தப்படுவதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற போலீசார், கன்னிக்கோவில் சந்திப்பு அருகே, திருக்கழுக்குன்றம் நோக்கிச் சென்ற 'ஈச்சர்' லாரியை மடக்கி சோதனை நடத்தியதில், மணல் கடத்தி வந்தது தெரிந்தது.
இதுதொடர்பாக, சிங்கபெருமாள்கோவில் அடுத்த அனுமந்தபுரத்தைச் சேர்ந்த வினோத், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.